கொலுசுக்காக காலையே வெட்டிய கொடூரம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு பாதங்களை கொடூரமாக வெட்டி வீசப்பட்டதால், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள எரகடா பகுதியில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியை சிலர் தாக்கியுள்ளனர்.

அப்போது அந்த பெண்ணின் இரண்டு பாதங்களை அந்த நபர்கள் வெட்டி மருத்துவமனையின் கூரையின் மேலே வீசியுள்ளனர்.

இதனால் அந்த பெண்ணிற்கு ரத்தம் அதிக வெளியேறிதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலே பகுதிக்கு வந்துவிட்டோம்.

அதன் பின் மருத்துவமனை முழுவதும் தேடினோம். ஆனால் சந்தேகப்படும் நபர் யாரும் இல்லை.

மருத்துவமனையானது 56 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 10 ஏக்கரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், அவர்கள் சில நேரங்களில் நோயாளிகளை தாக்குவதும் உண்டு,

தற்போது கொலை செய்யப்பட்டிருக்கும் பெண்ணின் கால் கொலுசுக்காகவே வெட்டி வீசியுள்ளனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட அவர் பாலியல்துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers