த்ரிஷா மீது வழக்கு? என்ன சொல்கிறது சென்னை உயர் நீதி மன்றம் ?

Report Print Trinity in இந்தியா

நடிகை திரிஷா மீது வருமானத்தை மறைத்ததாக கூறி ரூபாய் 1 கோடி மற்றும் 16 லட்சங்கள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பில் இப்போது இந்த அபராதம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2011 நிதியாண்டில் த்ரிஷா தனது வருமானத்தில் 3 கோடி 51 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வருமான வரித்துறை ஆணையர் 1 கோடி 16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து வருமானவரிதுறையில் மேல்முறையீடு செய்தார் த்ரிஷா.

அதன்படி த்ரிஷா 2010-2011 ஆண்டிற்கான அட்வான்ஸ் தொகையை 2012-2013ல் திருத்தப்பட்ட வருமானவரி கணக்கில் கட்டியிருப்பதாகவும் அதற்கான கணக்குகள் கொடுத்திருப்பதாக திரிஷா கூறியிருந்தார். இதனை ஏற்று வருமான வரித்துறை தீர்ப்பாயம் அவர் மீதான அபராத தொகையை ரத்து செய்தது.

இதனையடுத்து வருமானவரி துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தரி ஆகியோர் இந்த வழக்கில் அபராத தொகை ரத்து செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers