பிரபலங்களின் பாராட்டு மழையில் கூலித்தொழிலாளி- வைரலான பாடல்! யார் இவர் தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் கூலித்தொழிலாளி ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக, அந்த பாடலை பாடிய நிஜப்பாடகரை அது திக்குமுக்காட வைத்துள்ளது.

குறித்த பாடலை பாடிய நபருக்கு தாம் இசையமைக்கும் படத்தில் வாய்ப்பு வழங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் ராகேஷ். இவர் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் பாடிய விஷ்வரூபம் படப்பாடலான உண்னைக் காணாது நானும் என்ற பாடலை பாடியுள்ளார்.

தாம் பணி செய்யும் இடத்தில் உணவு இடைவேளையின்போது பாடப்பட்ட இந்த பாடல் சமூக வலைதளத்தில் கடந்த வாரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மட்டுமின்றி பல ஆயிரம் பேர் அவரது பாடல் குறித்து பாராட்டும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த வீடியோவை காண நேர்ந்த ஷங்கர் மகாதேவன் தமது டுவிட்டர் பக்கத்தில் தொடர்புடைய வீடியோவை இணைத்து, அந்த நபரை கண்டுபிடிக்க உதவுங்கள் என கோரிக்கை வைத்தார்.

மட்டுமின்றி அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் எனவும் பதிவு செய்திருந்தார், இதனிடையே ராகேஷின் தொடர்பு எண்ணை ஒருவழியாக பெற்று அவரை தொடர்பு கொண்டுள்ளார் ஷங்கர் மகாதேவன்.

மட்டுமின்றி மிக விரைவில் தாம் இணைந்து பாடவிருக்கிறோம் என்ற இனிப்பான தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கேரளாவிலும் பல இசையமைப்பாளர்கள் ராகேஷை அழைத்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers