கருணாநிதி சொன்னதற்காக நடிகர் ரஜினி செய்த செயல்

Report Print Fathima Fathima in இந்தியா

கருணாநிதி சொன்னதற்காக நடிகர் ரஜினிகாந்த் வெள்ளை தாடியை எடுத்தார் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடந்தது.

அப்போது பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு, கருணாநிதியுடன் நாங்கள் வாழ்ந்த நாட்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை, கலையுலகம் சார்பாக எந்த உதவி வேண்டுமென்று கேட்டாலும் இன்முகத்தோடு செய்வார்.

ரஜினி ஒருநாள் வெள்ளை தாடியுடன் வந்தார், அதை பார்த்த கலைஞர் என்னை அழைத்து, என்னய்யா வெளியே எல்லாம் வெள்ளை தாடியுடன் வர்றாடு, நான் சொன்னேன்னு சொல்லி வெள்ளை தாடியை எடுக்க சொல்லுய்யா என்றார்.

அன்று மாலையே ரஜினிகாந்தை சந்தித்து, கருணாநிதி சொன்னதை சொன்னேன், அடுத்த நாளே தாடியை எடுத்துவிட்டார்.

மறுநாள் கருணாநிதியை ரஜினி சந்தித்த போது, நீங்க சொன்னீங்களாமே, முகத்தை பாருங்க என காட்டியிருக்கிறார்.

எனக்கு கருணாநிதி போன்று செய்து, “யோவ், குழந்தை மாதிரி முகத்தை காட்டினான்யா” என கூறினார்.

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன என நெகிழ்வுடன் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்