குளியலறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாலிவுட்டின் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார்.

Yeh Hai Mohabbtein என்ற சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை நீறு அகர்வால்.

இவர் நேற்று குளியலறையில் மயங்கி கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என நினைப்பதற்குள் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீறு அகர்வால் இந்த தீடீர் மறைவுக்கு ரசிகர்களும் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரின் இறப்பு செய்தியை இவருடன் இணைந்து நடித்த திவ்யங்கா திரிபாதி வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers