அன்புள்ள கணவரே.. என்னை மன்னித்துவிடுங்கள்! தற்கொலைக்கு முன்பு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் எனபவரது மனைவி கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கவிதாவின் கணவர் ராஜ்குமார் டாஸ்மாக் ஊழியராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கவிதா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்பு மனைவி கவிதா எழுதிக்கொள்வது.

எனக்கு வாழ விருப்பம் இல்லை. நான் பைத்தியக்காரி போல் இருக்கிறேன். நம்முடைய 2 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும்.

குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். என்னுடைய கடைசி ஆசை, நீங்கள் நல்ல பெண்ணை திருமணம் முடித்து கொள்ளுங்கள். நான் ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து உள்ளேன்.

அம்மா என்னை மன்னித்து விடு. அப்பா இல்லாத வேதனையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன்.

யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers