அடுத்தவர் மனைவியுடன் தகாத பழக்கம்- தற்கொலை செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரியில் அடுத்தவரின் மனைவியுடன் சேர்ந்து, பிளேடால் சரமாரியாக கையை கிழித்துகொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே குருமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27).

அதற்கு அருகே ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மனைவி கார்த்திகா (26). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தினமும் வேலைக்கு செல்லும்போது கார்த்திகாவிற்கும், சதீஷிற்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இது வீட்டிற்கு தெரியவந்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பல ஊர்களை சுற்றிபார்த்துள்ளனர்.

கடந்த 14ம் தேதி கன்னியாகுமரியில் அறை எடுத்து தங்கிய ஜோடியினர், தங்களை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், தற்கொலை செய்துள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி தென்னை மரத்திற்கு உரமாக வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். ஆனால் எந்த மாற்றமும் தெரியாததால், பிளேடால் இருவரும் சரமாரியாக கையை கிழித்துக்கொண்டனர்.

இதில் அதிக ரத்த வெளியேறியதால், சம்பவ இடத்திலேயே கார்த்திகா உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சதீஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சதீஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers