மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு....விலைமாதர் என கணவர் கூறியது ஏற்கமுடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

டெல்லியில் மனைவியை விலை மாதர் என கூறிய கணவனை கொலை செய்த வழக்கில் மனைவியின் தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவன், மனைவியையும், மகளையும் விலைமாதர் என திட்டியுள்ளார்.

இந்த வார்த்தையால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனை கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தண்டனையை குறைக்க கோரி மனைவி மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், விலைமாதர் என கூறுவதை, குறிப்பாக மகளையும் அந்த வார்த்தை கொண்டு திட்டுவதை எந்த இந்திய பெண்ணும் விரும்பமாட்டார் என தெரிவித்தது.

அதுவும் கணவர் அப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்க கூடாது. விலைமாதர் என அவர் கூறிய அந்த வார்த்தை தான் அவரை கொலை செய்ய தூண்டியதாகவும் இதனை கொலை என கருதமுடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையும் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers