பிரிந்து சென்ற மனைவியை தேடிச் சென்று பழிவாங்கிய கணவன்! கதறி அழுத இரண்டு குழந்தைகள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பிரிந்து சென்ற மனைவியை கணவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள் புகுந்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த தம்பதி வேலுச்சாமி - லதா. இந்த தம்பதிக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனை பிரிந்த லதா, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, கொண்ணகட்டு பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு தன் குடும்பத்தின் வறுமை காரணமாக, லதா விராலிமலை பேருந்து நிலையத்தில் உள்ள அலங்காரப் பொருட்கள் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

வழக்கம் போல், குழந்தைகள் இருவரையும் பள்ளியில் விட்டு விட்டு, வந்த லதா இன்று காலை வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு கடைக்கு சென்ற வேலுச்சாமி, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் இந்த வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த வேலுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார்.

இதனால் லதா ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த பின் நேராக காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

பள்ளிக்கு சென்ற குழந்தைகள் தாய் இறந்த செய்தியை கேட்டு அங்கு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்