இப்படி பேசினால், கரியை பூசி நடுரோட்டில் வைத்து அறைய வேண்டும்: பிரபல நடிகை ஆவேசம்

Report Print Abisha in இந்தியா

தற்போது இந்தியவில் அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என பிரபல நடிகை கங்கனா ரனாவத் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, இந்தியர்களுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுப்பது அவசியமான ஒன்று.

இந்த தருணத்தில் இந்தியாவிற்கு அமைதி குறித்து பாடம் எடுக்க முற்படுபவர்களை, முகத்தில் கரியை பூசி, கழுதை மீது ஏற்றி நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவில்லை என்றால், அந்நாடு இந்தியாவை கோழை என்று கருத வழிவகுத்துவிடும் என்றும் கங்கனா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers