பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ஆண்: அடுத்து நடந்த அதிரடி சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவாவில் பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ஆண் ஒருவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக கழிவறை வசதிகள் உள்ளன.

இந்த நிலையில் பர்தா அணிந்த ஆண் ஒருவர் பெண்கள் கழிவறைக்குள் நுழைவதை பார்த்த சிலர், அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, 35 வயதான விர்கில் பெர்னாண்டஸ் என்பதும் அவர் ஒரு அரசு ஊழியர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்த அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்