புல்வாமா தாக்குதலால் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தனி ஒருவனாக நிதி சேர்க்கும் காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

புல்வாமா தாக்குதலால் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தனி ஒருவனாக நிதி சேர்க்கும் காவலர்: நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்காக பொலிசார் ஒருவர் நிதி திரட்டி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இதனால் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி ரூபாய் 17 லட்சத்தை வழங்கியது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த பொலிசாரான ஃபெரோஸ் கான் என்பவர் , இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனி ஆளாக ராம்பூர் பகுதியில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரும்பியதால், 3 நாள் அனுமதி கேட்டு, அவர்களுக்காக நிதி திரட்டி வருகிறேன். என்னால் முடிந்தது இதுதான். எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers