இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து வாக்களிக்கும் மூத்த வாக்காளர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்த முதல் வாக்காளர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் தொடங்கிய 1951 ஆம் ஆண்டில் இருந்து, கடந்த தேர்தல் வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தவறாது வாக்களித்த மூத்த வாக்காளர் ஒருவர்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வாக்களிக்க ஆர்வத்துடன் தயாராகி வருகிறார்.

இமாசலப்பிரதேச மாநிலத்தின் கல்பா பகுதியில் 1917 ஆம் ஆண்டு பிறந்தவர் ஷியாம் சரண் நேகி(102). இவர் கின்னாவூர் பகுதியில் பாடசாலை ஆசிரியராக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்.

தற்போது தனது இளைய மகனுடன் கல்பா பகுதியில் வசித்து வருகிறார். கல்பா, சிம்லாவில் இருந்து 275 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல வாகன வசதி செய்யப்படுவதுமுண்டு. தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷியாம் கூறுகையில்,

நாட்டை புதிய வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கி, வாக்குகளை நேர்மையான மனிதருக்கு செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers