அமேதி கப்பல் மூழ்குவதால் சாரதி வயநாடுக்கு ஓடிவிட்டார்: ரவிசங்கர் பிரசாத் கேலி

Report Print Arbin Arbin in இந்தியா

அமேதி கப்பல் மூழ்குவதால் சாரதி வயநாடுக்கு ஓடிவிட்டார் என ரவிசங்கர் பிரசாத் கேலி செய்துள்ளார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்,

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவது சங்கடமானது, பாதுகாப்பற்றது, உதவாதது என்று உணர்ந்துள்ளார்.

அதனாலேயே அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அங்குள்ள இன விவரங்களின் அடிப்படையில் அது பாதுகாப்பானது என்பதாலேயே அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதாவது அமேதி கப்பல் மூழ்குகிறது என்பதை தெரிந்துகொண்ட சாரதி தப்பி வயநாடு என்ற சரணாலயத்தில் கரையேறுகிறார்.

அங்கு 49.48 சதவீதம் பேர் இந்துக்கள், மற்றவர்கள் சிறுபான்மையினர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...