தீவிரவாதிக்காக டோனியை ரோல்மாடலாக எடுத்து சாதித்து காட்டிய சயீத்... அவரின் ராஜதந்திரம் இது தானாம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சயீத் அக்பருதீன் பேட்டியளித்துள்ளார்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி துணை இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது

இதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன.

ஆனால் இந்த தீர்மானத்திற்கு சீனா மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து முட்டுக் காட்டை போட்டுவந்த நிலையில், சீனாவும் இந்த தீர்மானித்திற்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்க, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டது. வெளிநாட்டிற்கும் தப்பி செல்ல முடியாது. அவனுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது. இது இந்தியாவின் தொடர் முயற்சியின் காரணமாகவே சாத்தியமானது என்று உலகநாடுகள் பாராட்டி வருகின்றன.

மேலும் ஐ.நா -வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சயீத் அக்பருதீன், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வாதிட்டுவந்தார்.

தற்போது ஐ.நா இப்படி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளதால், இந்த அறிவிப்புக்கு பின்னர் அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தான் இந்திய அணியின் முன்னாள் அணியின் தலைவரான டோனியின் பாணியை பின்பற்றுவதாக தெரிவித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அவர் தொடர்ந்து கூறுகையில், ஒரு விஷயத்தை டோனி அணுகுமுறை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. நினைத்த காரியத்தை முடிக்க இன்னும் காலம் இருக்கிறது என நம்புவேன். நேரம் முடிந்துவிட்டது என இருந்துவிட மாட்டேன். காலம் கடந்துவிட்டது என சொல்லவே மாட்டேன். முன்னதாகவே விட்டுக் கொடுக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இவர் டோனி தான் ரோல்மாடல் என்று கூறியதை அறிந்த அவரது ரசிகர்கள் இந்த தகவலை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்