இந்தியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய சிறுமி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் கோவா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த 15 வயது மாணவி வழக்கில் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு இங்கிலாந்தின் பைட்போர்டைச் சேர்ந்த 15 வயதான ஸ்கார்லெட் ஈடன் கீலிங் என்கிற 15 வயதான சிறுமி தன்னுடைய குடும்பத்துடன் 6 மாத பயணமாக இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

பிப்ரவரி 18ம் திகதியன்று உடலில் சிறு துணியுடன் கடற்கரையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, சாம்சன் டிசோசா மற்றும் பிளாசிடோ கார்வால்ஹோ என்கிற இரண்டு பேரும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

2016ம் ஆண்டு ஒரு கீழ் நீதிமன்றம் நீண்டகால விசாரணைக்கு பின்னர் இருவரையும் விடுவித்தது. ஆனால் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, சாம்சன் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கான தண்டனை விவரம், ஜூலை 19ம் திகதி அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்