திருமணமான சில மாதத்தில் அழகான மகளை பார்த்து கதறி துடித்த பெற்றோர்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் (27). இவருக்கும் பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பாவனா கணவரின் சுயரூபத்தை சில நாட்களிலேயே அறிந்து அதிர்ந்தார்.

அதாவது தான் வீடு வாங்க வேண்டும் என கூறி திருமணமான சில நாட்களில் இருந்தே 6 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்த தொடங்கினார்.

இதோடு ஹிதேஷின் பெற்றோரும் பாவனாவை துன்புறுத்தி வந்தனர்.

இதனால் பாவனா மனவேதனையில் இருந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து அறிந்த அவரின் பெற்றோர் மகள் சடலத்தை பார்த்து அலறி துடித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் பாவனாவின் சடலத்தை கைப்பற்றி விட்டு தற்கொலை வழக்கு பதிவு செய்தனர்.

பொலிசார் பாவனாவின் கணவர் ஹிதேஷ் மீது எந்தவொரு வழக்குப்பதிவும் செய்யாத நிலையில், அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஹிதேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்