லண்டனில் இருந்து நளினியின் மகள் எப்போது ஊருக்கு வருகிறார்? வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

லண்டனில் வசிக்கும் மகள் திருமணத்துக்காக சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் நளினியின் பரோலை நீட்டிக்க விண்ணப்பிப்போம் என அவர் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருந்த நளினி கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

லண்டனில் வசிக்கும் மகள் அரித்ரா திருமண ஏற்பாட்டுக்காக பரோல் கோரியிருந்த நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நளினி பரோல் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது.

இது குறித்து பேசிய நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, சிறையிலிருந்து, 30 நாள் பரோலில் வந்துள்ள நளினி, அவர் மகள் அரித்திராவின் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

யார் மாப்பிள்ளை, அவர் மகள் எப்போது வருகிறார் என்பது தெரியாது. தேவைப்பட்டால், பரோல் நீட்டிக்க விண்ணப்பிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்