அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியதா நாம் தமிழர் கட்சி? நோட்டாவுக்கு மட்டும் எவ்வளவு ஓட்டு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

வேலூர் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்த நிலையில், அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வெற்றிக்காக பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றார்.

இது அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட, தீபலட்சுமி பெற்ற வாக்குகள் அதிகம் ஆகும். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளையும் பெற்றனர்.

இதில் இருவருக்கும் இடையே உள்ள வாக்குகள் வித்தியாசம் 8,141 என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி நோட்டாவிற்கு 9,417 பேர் வாக்களித்துள்ளனர். நோட்டாவை பார்த்தால் கூட வாக்குகளின் வெற்றி வித்தியாசம் குறைவாகவே உள்ளது. அதுமட்டுமின்றி நாம் தமிழர் தான் அதிமுக-வின் ஓட்டுகளை பிரித்துவிட்டதாகவும், அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் நாம் தமிழர் கட்சி தான் கருத்தை மூத்த அரசியல்வாதிகள் பலர் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்