நடுக்கடலில் வெடித்து சிதறி கொழுந்து விட்டெரிந்த கப்பல்... உயிருக்கு போராடிய குழுவினர்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in இந்தியா

விசாகப்பட்டினம் கடற்கரையில் கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் மீப்பு கப்பலான ஜாகுவாரில் திடீரென பெரிய வெடி சத்தம் கேட்டு தீப்பிடித்து ஏரிந்தள்ளது.

விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையின்படி, 29 பேர் கொண்ட கப்பல் குழுவில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பாக வெளியான தகவலின் படி, ஜாகுவார் கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது, உடனே கப்பலில் இருந்து குழுவினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்துள்ளனர்.

தகவல்அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த இந்திய கடற்ப்படைக்கு சொந்தமான ராணி ராஷ்மோனி கப்பல், கடலில் குதித்த 28 பேரை மீட்டுள்ளனர். மேலும், ஜாகுவார் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.

கப்பலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் விபத்து குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்