தனியாக சென்ற சூர்யாவுக்கு நேர்ந்த கொடூரம்! வசமாக சிக்கிய அஜித் மற்றும் பிரபுதேவா.. வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சிறுவன் கொலை கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பிரபுதேவா என்ற நபரை தொடர்ந்து அஜித் என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குருவண்மேடு கிராமத்தை சேர்ந்த சிறுவன் சூர்யா.

அப்பகுதியில் ஜேசிபி கிளீனராக வேலை செய்து வந்துள்ளான், நேற்று மாலை விளையாடுவதற்காக தனியாக வெளியே சென்ற சூர்யாவை யாரோ சில மர்மநபர்கள் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தியும் தலையில் கொடூரமாக வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பிரபுதேவா என்ற இளைஞனை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அஜீத் என்ற மற்றொரு இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையில் சூர்யாவின் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சிறுவனும் ஜேசிபி பணியில் உதவியாளராக இருந்தான்.

அவன் உரிமையாளர் இல்லாத சமயத்தில் ஜேசிபியை வாடகைக்கு ஓட்டிவந்ததை பார்த்து சூர்யா உரிமையாளரிடம் கூறியுள்ளான்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

எப்படியிருந்தாலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் சம்பவம் தொடர்பான உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்