மனைவி, மகனை காணவில்லை... கணவரின் புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் மனைவி, மகனை காணவில்லை என பொறுமையாக 10 நாட்கள் கழித்து புகார் கொடுக்க வந்த கணவரின் செயலை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்கு பானு என்கிற மனைவியும், 4 வயதில் விசாகன் என்கிற மகனும் உள்ளனர்.

கடந்த 13ம் திகதியன்று சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நிகழ்ந்த கலந்தாய்வுக்காக சம்பத்குமாரின் தங்கை திருச்சியிலிருந்து வருகை தந்துள்ளார்.

அவரை தன்னுடைய மகனுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பானு அழைத்து சென்றுள்ளார். ஆனால் கலந்தாய்வு முடிந்த பின்னர், சம்பத்குமாரின் தங்கையை மட்டும் ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலே வீட்டிற்கு வருவதாக பானு கூறியுள்ளார்.

ஆனால் சம்பத்குமாரின் தங்கை மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார். அவருடைய மகனும், மனைவியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் தொலைந்து 10 நாட்களை கடந்திருக்கும் நிலையில், சம்பத்குமார் பொலிஸ் நிலயத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் சம்பவத்குமாரிடமே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்