மாதவிலக்கு நின்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது... 74 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்: வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மாதவிலக்கு முற்றிலும் நின்று பல ஆண்டுகள் ஆன போது, 74 வயதில் பெண் ஒருவர் தன்னுடைய அசராத முயற்சியால் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள நெலாபார்டிபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ் (80), இவர் எர்மாட்டி மங்கம்மா(74) என்பவரை கடந்த 1962-ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்து ஆண்டுகள் கழிந்ததே தவிர, குழந்தை பிறக்கவில்லை. இதனால் மிகுந்த கவலையில் இருந்த இந்த தம்பதி தொடர்ந்து பல மருத்துவர்களை சந்தித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு வாய்ப்பும் அமையவில்லை.

முதுமை கூடிய போதும், துவளாத மங்கம்மா, 55 வயதான பெண் ஒருவர் கருத்தரித்த செய்தியைக் கண்டு, குண்டூரில் உள்ள அஹல்யா என்ற மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு மங்கம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் இல்லாததால், ஐ.வி.எப் முறையில் கருத்தரிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

மங்கம்மாவிற்கு மாத விலக்கு முற்றிலும் நின்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், செயற்கை முறையயில் மாதவிலக்கு வர முயற்சி செய்துள்ளனர். அதன் படி ஒரே மாதத்தில் மாத விலக்கு வர, அதன் பின் ஐ.வி.எப் (In Vitro Fertilisation) முறையில் கருத்தரிக்க வைத்துள்ளனர்.

அதன் பயனாக இன்று மங்கம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. மங்கம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பஞ்சாப்பை சேர்ந்த 72 வயது தலிஞ்சர் கவுர் என்பவர் குழந்தை பெற்றதே அதிக வயதில் குழந்தை பெற்றதாக சாதனையாக உள்ளதால், மங்கம்மா சாதனை புத்தகத்தில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்