வீட்டு குளியலறை சுவற்றில் இரத்தத்தில் ஆண் பெயரை எழுதியிருந்த திருமணமான பெண்.. வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வீட்டு குளியலறை சுவற்றில் இரத்தத்தால் எழுதிவிட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி கணவர் குறித்து பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஹரிகிருஷ்ணன்.

இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்செல்வி என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த வாரம் காவல் நிலையத்துக்கு சென்ற ஹரிகிருஷ்ணன், வீட்டில் தனியாக இருந்த மனைவி தமிழ்செல்வி காணாமல் போயுள்ளாதாகவும், வீடு திறந்து இருப்பதுடன் குளியல் அறையில் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் பொலிசாரிடம் பதற்றத்துடன் கூறினார்.

பொலிசார் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டின் குளியலறையில் உள்ள சுவற்றில் ரத்தக் கறைகள் இருந்துள்ளது.

இதோடு சுவற்றில் விமல் ஆளுங்க... காப்பாத்து ஹரி என இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. இதோடு வீட்டில் ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று கிடந்தது.

புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரிடம் பணியாற்றி வந்த விமலிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஹரிகிருஷ்ணன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும் போது தமிழ்ச்செல்வி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு தமிழ்செல்வி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் தலைமறைவானதாகவும், இனி அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் தமிழ்செல்வி நீதிபதி முன்னர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்