குடும்பத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் முன்னாள் நீதிபதி... வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

முன்னாள் தமிழக உயர்நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய குடும்பவத்துடன் சேர்ந்து மருமகளை கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் நீதிபதியான ராமமோகன ராவ் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்திலும், தமிழக உயர்நீதிமன்றத்திலும் பணிபுரிந்து கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அவருடைய மருமகள் சிந்து சர்மா, தனது கணவருடன் சேர்ந்துகொண்டு நீதிபதி (ஓய்வு) ராமமோகன ராவ், அவரது மனைவி நூட்டி துர்கா ஜெய லக்ஷ்மி ஆகியோர் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அவர்களுடைய வீட்டின் முன்பும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமமோகன ராவ் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் அவர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்