வயிற்றுவலியால் துடித்த வாய்பேச முடியாத திருமணமாகாத இளம்பெண்! பரிசோதனையில் குட்டு வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வயிற்றுவலியால் துடித்ததையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

திருவாரூர் மாவட்டத்தின் அப்பரசம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கௌதமி (25). இவர் காது கேட்காமல் வாய் பேச முடியாத ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.

திருமணமாகாத கெளதமி சில மாதங்களுக்கு முன் வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் கௌதமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது குறித்து கெளதமிக்கு சரியாக சொல்லத் தெரியாததால் பெற்றோர்கள் குழம்பி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிரசவ வலியால் அவதிப்பட்ட கௌதமிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதனை அடுத்து கௌதமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்