கணவனின் ஆசைக்காக மனைவி செய்த அதிர்ச்சி செயல்... விசாரணையில் தெரிந்த உண்மை

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆண் வாரிசு இல்லை என்பதற்காக 16 வயது சிறுமியை கடத்தில் மனைவி கணவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராமசாமி. இவருக்கு அசோக்குமார்(35) என்ற மகன் உள்ளார். அசோக்குமாருக்கும் சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த செல்லகிளிக்கும் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அசோக்குமார் தான் வேலை பார்த்து வரும் தொழிற்சாலையில், 16 வயது சிறுமியிடம், நான் உன்னை காதலிக்கிறேன்.

எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால், உன்னை நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன். இதற்கு என் முதல் மனைவி சம்மதம் தெரிவித்து விட்டார் என்று கூறி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில், செல்லக்கிளி சிறுமியை கடத்திச் சென்று தனது கணவருக்கு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் செல்லக்கிளி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து வைத்தது உண்மை என்பது தெரியவந்ததால், அவர்கள் இரண்டு பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்