ஊர் பெயர் கெட்டது... வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் சத்திஷ்கர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு இரையான பெண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதால், அவருக்கு கிராமத்து பஞ்சாயத்தில் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவர் கடந்த 4 ஆம் திகதி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு அந்த பெண் ஏற்கெனவே அறிமுகமான சந்தீப், கிஷோர் ஆகியோர் கட்டிட வேலைக்கு அழைத்ததால் அவர்களை நம்பி குறித்த பெண் சென்றுள்ளார்.

அப்போதுதான் தன்னை அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால், அந்தப் பெண் வீட்டுக்கு சென்றதும் அம்மாவிடம் விடயத்தைக் கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு பொலிசார் நடந்தவற்றை புகாராக எழுதி தரக் கூறியதும் தயங்கிய அந்தப் பெண், ஊர்க்காரர்களிடம் விசாரித்துவிட்டு வருவதாகவும் கூறி வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கூடிய பஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை செய்த சந்தீப், கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

மட்டுமின்றி ஊருக்கு அவமரியாதையை, அந்த இளம் பெண் ஏற்படுத்தி விட்டதாக கூறி அவருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்