சீக்கிரம் வாங்கண்ணா!... கெஞ்சி கெஞ்சி உயிரை விட்ட இளைஞர்- பதைபதைக்கும் ஓடியோ

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து பேசும் ஓடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிக்கும் நடராஜ் என்பவரின் மகன் கணேஷ்குமார்.

கல்லூரி மாணவரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றிருக்கிறார்.

மாலை வரை கிரிக்கெட் விளையாடி முடித்ததும் தண்ணீர் குடித்த கணேஷ்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

vikatan

இவர் இறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில் கணேஷ்குமாரின் செல்போனை பரிசோதித்து பார்த்த போது கடைசியாக 108க்கு போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதன்பின்னர் கால் ரெக்கார்டை கேட்ட போது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உயிருக்கு போராடிய நேரத்தில் 108 அழைத்த கணேஷ்குமார்,

``நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா… மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“ `

`பக்கத்தில் இருக்கிறவங்க யாரிடமாவது கொடுங்க….”

``யாருமே இல்லைண்ணா... கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா… முடியலண்ணா…”

``சீக்கிரம்னா எங்கிருந்து வருவது…? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க… பயப்படாதீங்க… பக்கத்துல இருக்கறவங்க கிட்ட கொடுங்க…. பக்கத்துல யாருமே இருக்கமாட்டாங்களா?”

vikatan

``யாருமே இல்லைண்ணா…“ “பச்சையப்பாஸ் ஸ்கூல்… மூங்கில் மண்டபம்ணா..” “எங்கிருக்கிறது?“ “காஞ்சிபுரம்ணா… கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா…“

“பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கொடுங்க“ “யாருமே இல்லைண்ணா…” “நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்கன்னு பார்க்கனும்… டக்குன்னு நடந்துபோய் யாரையாவது கால்பண்ணச் சொல்லுங்க…“ இப்படியாக முடிகிறது அந்த ஓடியோ.

சுமார் 16 நிமிடங்கள் போராடி உயிரை விட்டிருக்கிறான் கணேஷ்குமார், ஒருவேளை 108 ஆம்புலன்ஸ் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் தங்களது மகனின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என கதறுகின்றனர் அவனது பெற்றோர்.

இனிமேலும் இதுபோன்று அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்