திருமணமான 21 வயது பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பேருந்து நடந்துனர்! வெளிவரும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான பெண் மீது ஒருதலை காதலால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த இளம்பெண் சலோமி (21)

திருமணமான இவரை பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது விருப்பத்தை ஏற்காத சலோமி மீது பெட்ரோல் ஊற்றி சுந்தரமூர்த்தி தீவைத்துள்ளார்.

இதையடுத்து பலத்த தீக்காயமடைந்த சலோமி ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சலோமி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தியை பொதுமக்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்