தமிழகத்தில் குழந்தைகள் ஆபாசப்படத்தை மற்றவர்களுக்கு பரப்பி சிக்கியவர்கள் எத்தனை பேர்? அதிகாரபூர்வ தகவல்

Report Print Raju Raju in இந்தியா
294Shares

குழந்தைகள் ஆபாசப்படத்தை பரப்பியதாக இதுவரை தமிழகத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகள் குற்றப் பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

உலகளவில் குழந்தைகள் ஆபாசப்படத்தை அதிகம் பார்ப்பது இந்தியாவில் தான் எனவும் அதிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் முதல் ஆளாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.

இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தொடங்கிவைத்தார்.

இதில் திருநங்கை அப்சரா ரெட்டி, நடிகை மீரா மிதுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் ஜெயலட்சுமி, குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது .

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு துளியளவும் பின்வாங்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓன்லைன் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் புகார்கள் பெருகி வருகிறது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப்படத்தை பரப்புவோர்களில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்