உயிருடன் இருக்கும் இந்திய முன்னாள் ஜனாதிபதியின் ஆத்மா சாந்தியடைய வேண்டி குவிந்த அஞ்சலி!

Report Print Basu in இந்தியா
397Shares

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கையில் சமூகவலைதளமான ட்விட்டரில் #ripPranabMukherjee என டிரெண்டானது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. அதேசமயம் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

2012 - 2017 முதல் இந்தியாவின் ஜனாதிபதியாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, , தொடர்ந்து தீவிர சிகிச்சையில் வென்டிலேட்டர் உதவியுடன் கவலைக்கிடமாக இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 84 வயதான பிரணாப் முகர்ஜி இறந்துவிட்டதாக செய்தி பரவியதை அடுத்து ட்விட்டரில் #ripPranabMukherjee என இந்திய அளவில் டிரெண்டானது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தனது தந்தை இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் பதிவிட்டதாவது, எனது தந்தை பிரணாப் முகர்ஜி இன்னும் உயிருடன் இருக்கிறார் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் பரப்பப்படும் ஊகங்கள் மற்றும் போலி செய்திகளால் இந்தியாவில் ஊடகங்கள் போலி செய்திகளின் தொழிற்சாலையாக மாறிவிட்டன என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது என அபிஜித் முகர்ஜி கொந்தளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்