15 வயதில் முதல் திருமணம்! தற்போது 17 வயதில் இரண்டாம் திருமணம் செய்த சிறுமி... தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா
25666Shares

தமிழகத்தில் 15 வயதில் முதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி, தற்போது 17 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தலைசுற்ற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 - ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு 25 வயது இளைஞர் சிவாவுடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்குத் தெரிந்து அவர் கண்டித்துள்ளார்.

இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்ட சிறுமி பெற்றோர் வீட்டுக்கு வந்த நிலையில் பிறகு மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமி திண்டுக்கல் மாவட்டம் மச்சூர் பகுதியில் இருப்பதை அறிந்த பொலிசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

சிறுமியை கடத்திச் சென்ற சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுமிக்கு தற்போது 17 வயது ஆகிறது.

இதனையடுத்து சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மற்றும் கணவர் மீது வழக்குப்பதியப்பட்டது.

சிறுமியைக் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்ததாக சிவாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்