1.5 கோடி சொத்து... காதலியுடன் சேர விரும்பிய கணவருக்கு மனைவி வைத்த நிபந்தனை

Report Print Arbin Arbin in இந்தியா
781Shares

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரூ.1.5 கோடிக்கு ஈடாக தனது கணவரை, அவரின் காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தில், ஒரு பெண் தன்னை ஏமாற்றிய கணவரை ரூ .1.5 கோடிக்கு விவாகரத்து செய்ய ஒப்புக் கொண்டார்.

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒரு சிறுமி தனது தந்தை, அவரின் சக ஊழியருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தால் அவரது பெற்றோர்களிடையே வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாகவும்,

இதனால் தனக்கும் தன் சகோதரியின் கல்விக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் அச்சிறுமி குற்றம் சாட்டினார்

இதன்பின்னர் நீதிமன்றத்திற்கு தம்பதியினர் கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்பட்டனர். இதில் கணவர் தன்னை விட வயதான ஒரு சக ஊழியருடன் உறவு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தனது மனைவியை விட்டுவிட்டு தனது சக ஊழியருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பினார்.

இருப்பினும், விவாகரத்துக்கு மனைவி உடன்படவில்லை. பல ஆலோசனை அமர்வுகளுக்குப் பிறகு, இந்த தம்பதி ஒரு உடன்பாட்டை எட்டியது.

அதன்படி அவர்கள் தற்போது தங்கியிருக்கும் குடியிருப்பு மற்றும் 27 லட்சம் ரொக்கம் என மொத்தம் 1.5 கோடி ரூபாய் சொத்தை கையளித்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தமது மகள்களின் எதிர்காலம் கருதியே, இந்த முடிவுக்கு வந்ததாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்