ராதிகா மற்றும் சரத்குமார் வழக்கில் திடீரென ஏற்பட்ட முக்கிய திருப்பம்! சற்றுமுன்னர் நீதிமன்றம் அளித்த புதிய உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா
0Shares

செக் மோசடி வழக்கின் தீர்ப்பில் திடீர் திருப்பமாக நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரூ.2.50 கோடியை ரேடியண்ட் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த ரேடியண்ட் நிறுவனம் சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதாவது, சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜரான சரத்குமார், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்கும் விதமாக, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்று தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஆனால்,கொரோனா தொற்று காரணமாக ராதிகா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, நீதிமன்றத்தில் ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்