என்னாச்சு குழந்தை அழுகிறதா? சமாளிக்க சூப்பரான டிப்ஸ்

Report Print Mahalakshmi Mahalakshmi in குழந்தைகள்

என்னாச்சு குழந்தை அழுகுதா, உட்வாட்ஸ் கொடுக்க சொல்லு என்ற விளம்பர வசனத்தை கேட்டு நாம் சிரித்திருப்போம்.

ஆனால் உண்மையிலேயே குழந்தையின் அழுகையை கேட்கவே முடியாது.

மற்றவர்களுக்குகே இப்படி என்றால் குழந்தைகளின் தாய்க்கு எப்படி இருக்கும்.

முதல் குழந்தை ஈன்ற தாய்மார்களுக்கு குழந்தை எதற்காக எழுகிறது, எப்படி அழுகையை நிறுத்துவது என்று தெரியாது.

அப்படி யோசிக்கும் தாய்மார்களுக்கான ஈஸி டிப்ஸ் இதோ,

  • குழந்தை நிறுத்தாமல் அழும் சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் அவர்களை குளிப்பாட்டினால், அழுகையை நிறுத்திவிடுவார்கள்.
  • சிலநேரங்களில் வயிற்று வலியால் கூட குழந்தை அழும், அந்த நேரத்தில் குழந்தையின் வயிற்றை தேய்த்து விட வேண்டும்.
  • தாய்மார்கள் குழந்தையின் அழுகையை நிறுத்த பாட்டு பாடலாம்.
  • குழந்தையை ஒரே கையில், ஒரே பக்கத்தில் வைத்திருந்தாலும் அவர்கள் அழ ஆரம்பிப்பார்கள். அந்த சமயத்தில் வீட்டிலிருக்கும் மற்ற நபர்களிடம் கொடுத்து சமாதானப்படுத்துங்கள்.
  • குழந்தைகள் எப்போதும் வித்தியாசமாக முக பாவனையை கொண்டு வந்தால், சிரிப்பார்கள். ஆகவே குழந்தை அழும் போது முக பாவனையை மாற்றி மாற்றி காண்பியுங்கள்.
  • குழந்தை பசிக்காகவும் அழும், எனவே பால் கொடுத்து அழுகையை போக்கலாம்.
  • குழந்தை பால் குடித்த பின்னரும் அழ ஆரம்பித்தால், அவர்களின் நாப்கின்னை கவனியுங்கள். ஏனெனில் நாப்கின் அதிகப்படியான ஈரத்துடன் இருந்தாலும், குழந்தை அழுவார்கள்.
  • குழந்தைகளின் கவனத்தை மாற்றிவிடுங்கள், வேறொரு பொருளை காண்பிப்பது, பச்சை பசேல் என்று இருக்கும் இடங்களை காண்பிப்பது, வீட்டு செல்ல பிராணிகளை காண்பிப்பது என அவர்களது எண்ணத்தை திசை திருப்பி விடுங்கள்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments