குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற உணவு முறைகள்

Report Print Fathima Fathima in குழந்தைகள்

தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளின் வளர்ப்பில் உள்ள உணவு முறைகளில் தான் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும்.

ஏனெனில் குழந்தைகளின் சிறு வயதில் நாம் அளிக்கும் சத்தான உணவுகள் தான் அவர்களின் எதிர்கால ஆரோக்கியமான வாழ்விற்கு அஸ்திவாரமாக அமைகிறது.

எனவே குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டிய உணவு முறைகளின் மாற்றங்களை குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பற்றி காண்போம்.

0-4 மாதம்

தாய்பாலில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்கள் தொடர்ந்து தாய்பால் கொடுப்பதே மிகச்சிறந்த உணவாகும். இதனால் குழந்தையின் உடம்பில் உள்ள அனைத்து கழிவுப் பொருட்களும் வெளியேறி, அனைத்து உறுப்புகளும் வலுவடைந்து, செரிமான மண்டலத்தை நன்கு செயல்பட வைக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையை உண்டாக்கும் பிலிரூபின் என்ற நிறமி தாய்பாலினால் வெளியேற்றப்படுகிறது.

4-6 மாதம்

நான்கு மாதங்களுக்கு பிறகு, ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்பால் கொடுத்தும் குழந்தை மீண்டும் பசிக்கு அழுதால், அப்போது வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு,கேரட், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற உணவுகளை நன்கு மசித்து ஒரு டேபிள் ஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும்.

6-8 மாதம்

ஆறு மாதங்களுக்கு பின்னர் தாய்பால் மற்றும் பழங்கள் கொடுக்கும் போதே, வேக வைத்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சிக்கன் போன்ற அனைத்தையும் மசித்து கொடுக்கலாம்.

இதனுடன் 3-9 செர்லாக்கயும் கொடுக்கலாம். இந்த உணவுகளை கொடுக்கும் போது குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவதை போல் தெரிந்தால் எந்த உணவால் உண்டாகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெற வேண்டும்.

8-10 மாதம்

எட்டு மாதங்களுக்கு பிறகு, இரும்புச்சத்து மிகுந்த தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றையும் அதனுடன், புரோட்டீன் உணவான முட்டை, மீன் போன்ற உணவுகளையும், தயிரையும் கொடுக்கலாம்.

10-12 மாதம்

பத்து மாதங்களுக்கு பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம்.குறிப்பாக உணவுகள் கொடுக்கும் போது மிக கவனமாகவும்,அளவாகவும் கொடுக்க வேண்டும். உதாரணமாக 1/3 கப் பால் பொருட்களுடன், 1/2 கப் சீஸ் மற்றும் 1/4 அல்லது 1/2கப் சாதத்துடன் காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments