குரங்கின் சாதுரியத்தால் தப்பிய மான்

Report Print Nalini in குழந்தைகள்

ஒரு காட்டில் ஒரு புலி வாழ்ந்து வந்தது. அந்தப்புலி ஒருநாள் இரையை தேடி காட்டுக்குள் சென்றது. அப்போது ஒரு இடத்தில் வேட்டைக்காரன் வச்சுருந்த கூண்டுக்குள்ள இருந்த இரையை வாயில் எச்சில் ஒழுக பார்த்தது. பின்பு அந்த இரையை சாப்பிட சென்றபோது அந்த கூண்டு மூடிக்கொண்டது.

புலியால் வெளியே வரவே முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் புலியால் வெளிய வர முடியவில்லை.

இதனால் புலி ரொம்ப கவலையானது. அப்பப் பார்த்து ஒரு மான் அங்கே வந்தது. கூண்டுக்குள் கவலையோட இருக்குற புலியை பார்த்தது. புலி கவலையோட கூண்டுக்குள் இருந்ததை பார்த்து மானுக்கு தைரியம் வந்தது. அதனால கூண்டுக்கு அருகே வந்து எட்டி பார்த்தது மான்.

புலி ரெம்ப கெஞ்சி அழுது மானிடம் கேட்டது. என்னை எப்படியாவது காப்பாத்தி விடுன்னு. நீயே ஒரு புலி, நீ வெளிய வந்தா என்னை தின்னுடுவ. அதனால நான் திறக்க மாட்டேன்னு சொல்லிவிட்டது. ஆனா புலி மறுபடியும் சொன்னது.

“சே சே நான் அப்படி உன்னை தின்னமாட்டேன். சைவ புலி நான். வெறும் கேரட்டு கிழங்கு புல் செடி தான் சாப்பிடுவேன் என்று சொன்னது. எந்த உயிரையும் கொல்லமாட்டேன். ஏன்னா நான் ஒரு வருசம் ஒரு சாமியார்கிட்டே வேலை பார்க்குறேன். அதனால எனக்கும் சாமியார் பழக்கம் வந்துருச்சு. அதனால நீ தைரியமா திற” அப்படினு பொய் சொல்லியது புலி.

அப்படி சொன்னதை மான் நம்பியது. மான் அந்த கூண்டை திறந்து விட்டது. திறந்த உடனே மானை கொல்ல புலி விரட்டியது. மான் ஓடிக்கொண்டே சொன்னது உன்னை காப்பாத்துன என்னை கொல்ல துணிஞ்சுட்டியோ. நீ சொன்னது ஒன்னு நீ செய்றது ஒன்னு. இப்படி பொய் சொல்லி ஏமாத்தி துரோகம் பண்ணிட்டியே நீயெல்லாம் உருப்பட மாட்டேனு சொல்லி ஓடியது.

வழியில் ஒரு குரங்கு வந்தது அதனிடம் அந்த மான் தன் நிலையை சொல்லி உதவி கேட்டது. உடனே குரங்கு நான் நம்ப மாட்டேன் அது எப்படி உன்னால திறக்க முடியும்? அந்த புலியால எப்படி கூண்டுக்குள்ள போக முடியும் என்று குரங்கு சொன்னது. இதை கேட்ட புலிக்கு ரெம்ப ரோஷம் வந்தது.

இந்தா பாரு நீயே வந்து பாரு. நான் மறுபடியும் கூண்டுக்குள்ளே போய் காட்டுறேன் எப்படி மான் திறக்குதுனு பாரு என்று ரோஷத்தோடு கூண்டுக்குள்ளே சென்றது. புலி கூண்டுக்குள்ளே சென்றதும் கூண்டு தானே மூடியது. மானும் குரங்கும் சந்தோஷமடைந்தது. சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு புலி ஏமாந்து போனது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்