அறிமுகம் செய்யப்பட்டது சாம்சுங்கின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சாம்சுங் நிறுவனமானது Galaxy A31எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகம்செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Octa core processor, பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

எனினும் இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512 GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

இவற்றுடன் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், மற்றும் தலா 5 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் 15W அதிவிரைவு சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 5,000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்