இந்த 6 ராசிக்காரர்களும் எப்போதும் தைரியமும், துணிச்சலும் நிறைந்தவர்களாக இருப்பார்களாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

Report Print Kavitha in வாழ்க்கை முறை

12 ராசிகாரர்களுள் எந்தெந்த ராசிகள் அவ்வாறு தைரியமும், துணிச்சலும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரையில் அவர்கள் அகராதியில் பயம் என்ற வார்த்தையே கிடையாது.

தங்களின் எல்லைகளை தாண்டி வெளியே வர இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

மற்றவர்கள் ஆபத்து மற்றும் அபாயங்கள் நிறைந்ததாக பார்க்கும் ஒரு விஷயத்தை இவர்கள் வாய்ப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த சவாலாக பார்ப்பார்கள்.

வசதியாக வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்வதே மகிழ்ச்சியான வழி என்று சிந்திப்பவர்கள் இவர்கள்.

தைரியமே வெற்றியை பெற்றுத்தரும் என்பது இவர்களின் ஆழ்மனதில் இருக்கும் நம்பிக்கையாகும்.

தனுசு

நம்பிக்கையும், பயமின்மையும் தனுசு ராசிக்காரர்களின் வலிமையான ஆயுதங்களாகும்.

முன்வைத்த காலை பின் வைக்காத இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு செயலையும் சவாலாகவே சந்திப்பதுடன் அதற்கான சிறப்பான முடிவையும் எதிர்பார்ப்பார்கள்.

அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் தைரியத்திற்காக அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

ஒருவேளை இவர்கள் எதிர்பார்த்தது போல முடிவு வராவிட்டால் இவர்கள் அதனை வாய்ப்பாகவும், அனுபவமாகவும் பார்ப்பார்களே தவிர தோல்வியாக எண்ண மாட்டார்கள். அவர்களின் தைரியம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

விருச்சிகம்

மிகவும் புத்திசாலித்தனமான ராசிகளில் ஒருவரான இவர்கள் தைரியமான ராசியும் கூட. ஆபத்தை எதிர்கொள்வதுதான் உண்மையான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.

இவர்கள் பயத்தை எதிர்கொள்வதற்கோ, தாண்டி செல்வதற்கோ இவர்களை தூண்டிவிட வேண்டிய அவசியமில்லை.

இவர்களின் குறிக்கோளே இவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

தைரியமாக இருக்க முடியாக சூழ்நிலை இவர்களை உள்ளிருந்து கொல்லும், எனவே இவர்கள் எப்பொழுதும் தைரியமாக இருக்க முயல்வார்கள்.

சிம்மம்

இவர்கள் எப்போதாவது நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக நேரிடலாம், ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே பெருமைமிக்க இராசியாக இருப்பார்கள். இவர்களின் ராசி அடையாளமே இவர்களுக்கு தனித்துவமான தைரியத்தையும், சிறப்பையும் கொடுக்கும்.

இவர்களின் ஈகோவே இவர்களின் திறன்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை விரட்ட போதுமானது.

அனைத்து சந்தர்ப்பத்தையும் அவர்கள் தங்களை நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்பாக பார்ப்பார்கள், அதனால் அவர்களின் தைரியத்தை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

கும்பம்

இவர்களின் துணிச்சலும், தைரியமும் மற்ற ராசிகளிடம் இருந்து வித்தியாசமாக வெளிப்படும்.

இவர்களின் ராசியில் இருக்கும் ரகசியம் என்னவெனில் இவர்களின் தனித்துவமான குணங்கள் இவர்களை இயற்கையாகவே தைரியசாலிகளாகக் காட்டும்.

மிகவும் சுயாதீனமாக சிந்திக்கும் இவர்கள் முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறக்கூடியவர்கள்.

அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடியவர்கள் இவர்கள். தைரியமாக இருப்பது எப்படி என்பது மட்டுமே இவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வால் தைரியம் குறைவாக உள்ள ராசிக்காரர்களாக தோன்றலாம் ஆனால் இவர்களின் வீரமும், தைரியமும் யாருக்கும் குறைந்ததல்ல அதனால்தான் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் மற்ற ராசிகளை போல நேரடி செயல்களில் ஈடுபடாவிட்டாலும் எந்த சூழ்நிலையையும் கண்டு ஓட மாட்டார்கள், மாறாக எதிர்த்து நிற்பார்கள்.

மற்றவர்களின் நன்மைக்காக தன்னுடைய நலனை தியாகம் செய்ய இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள். தைரியத்திலேயே மிகப்பெரிய தைரியம் இதுதான்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்