இந்த ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையா இருங்க.. ஒரு துளியும் யோசிக்காமல் காயப்படுத்திவிடுவார்களாம்!

Report Print Kavitha in வாழ்க்கை முறை

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம்படைத்தவர்களாக காணப்படுவார்.

அந்தவகையில் 12 ராசிகளில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை பரப்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது ஒளிவு மறைவின்றி கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

இவர்கள் விரைவில் கோபப்படக்கூடியவர்கள், அதனால் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் இவர்கள் எளிதில் மற்றவரின் மனதை காயப்படுத்தி விடுவார்கள்.

இவர்கள் மற்றவர் மனதை காயப்படுத்தும் போது அது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், ஏனெனில் இவர்களின் குணம் அதுவல்ல. ஆனால் அவ்வாறு செய்யும்போது அதனை திட்டமிட்டு செய்வார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள்.

மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும்.

இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவருக்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள்.

கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கலகலப்பானவர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களை பொதுவாக நாம் அப்படி நினைக்க மாட்டோம்.

ஆனால் சில கடுமையான விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் திறனை அவர்கள் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றால் இவர்கள் விரக்தி, கோபம், வஞ்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வார்கள்.

இவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இந்த குணம் சிலசமயம் கடுமையான சொற்களின் மூலம் வெளிப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அதீத நேர்மையாளர்கள், சில சமயம் அவர்களின் இந்த நேர்மை மற்றவர்களை கடுமையாக காயப்படுத்தலாம்.

இவர்கள் ஒரு காரணத்திற்காக மனக்காயம் அடைந்திருந்தால் இவர்கள் மற்றவர்களின் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுக்குள் பொறாமை, மனக்கசப்பு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது இவர்கள் அதனை மனதிற்குள்ளேயே வைத்திருக்க மாட்டார்கள்.

அதேசமயம் இவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனவே என்ன சொன்னால் அது அதிக காயத்தை ஏற்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

கடகம்

அதிக உணர்ச்சிவசப்படும், பாசக்கார கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்துவார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம்.

ஆனால் விருச்சிக ராசிக்காரர்களை போலவே இவர்களும் தான் காயப்பட்டால் மற்றவரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இவர்களிடம் இருந்து வரும் கடுமையான சொற்கள் நமக்கு அதிக காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நாம் அதனை எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

அவர்கள் கோபப்படும் அளவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, ஆனால் நீங்கள் நிச்சயம் ஏதாவது செய்திருப்பீர்கள்.

இல்லையெனில் கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்த தொடங்க மாட்டார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்