சிறுமியை அசுரத்தனமாக தாக்கிய பாட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை?

Report Print Deepthi Deepthi in மலேசியா
2831Shares
2831Shares
ibctamil.com

மலேசியாவில் சிறுமியை அரக்கத்தனமாக தாக்கிய பாட்டிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் ஓடிய அந்த வீடியோவில், 6 வயது சிறுமியை அவரது பாட்டி அசுரத்தனமாக அடிக்கிறார், இதனை மற்றொரு பாட்டி வீடியோ எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்துள்ளது என்றாலும் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவம் நடந்த இடம் மலேசியாவின் பூச்சோங் பிரடானா என்பது சில மணிநேரங்களில் உறுதி செய்யப்பட்டது.

சுபாங்ஜெயா காவலர்கள் விசாரித்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுபாங்ஜெயா காவல்துறை அதிகாரி முகமது அஸ்லின் சதாரி கூறியதாவது, சிறுமியை கொடூரமாக அடித்த பாட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய சட்டவிதிகளின்படி அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.30 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எனது மாமியார் செய்த செயலை மன்னிக்க முடியாது என்றும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments