மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ்பெண்

Report Print Deepthi Deepthi in மலேசியா
679Shares
679Shares
ibctamil.com

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுக்கு மலேசியாவில உள்ள உணவகம் ஒன்றில் காய்கறி நறுக்கும் வேலை கிடைத்துள்ளது.

இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், ஒரு பெண் குழந்தை உள்ளது. வறுமையின் காரணமாக 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் காய்கறி நறுக்கும் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சில மாதங்களுக்கு முன் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அவருக்கு உணவகத்தில் வேலை தரவில்லை, பாலியல் விடுதி ஒன்றில் விற்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பியவர், சமூக நல ஆர்வலர்களின் உதவியுடன் மலேசியக் காவல்துறையினரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக, பானுப்பிரியா அங்குள்ள அரசுக் காப்பகத்தில் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கு தனியாக தவித்துக்கொண்டிருக்கும் தனது மகள் பானுப்பிரியாவை மலேசியாவிலிருந்து மீட்டுக்கொண்டு வர தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் உதவியை அவரது தாய் நாடியுள்ளார்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்