“நரக வாழ்விலிருந்து விடுதலை” நடுரோட்டில் புர்காவை எரித்த பெண்!

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்

சிரியா- துருக்கி எல்லையில் இருக்கும் நகரம் Manbij, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த நகரை கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் மீட்டனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, பெண்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வெளியே செல்லும் போது தலை முதல் கால் வரை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும், ஆண்கள் துணையின்றி வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனை மீறும் பெண்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன, இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்த நகரை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனை கொண்டாடும் விதமாக குறித்த நகரில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் தெருவில் ஒன்றாக கூடி, புர்காவை தீயிட்டு கொளுத்துகின்றனர்.

கூடியிருந்த மக்கள் மிக உற்சாகத்துடன் கைகளை தட்டி, ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments