சண்டை காட்சி வீடியோவை இணையத்தில் பதிவேற்றியவர் கைது: ஆயுள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
292Shares
292Shares
ibctamil.com

ஐக்கிய அமீரகத்தின் அஜ்மான் நாட்டில் தெருவில் நடந்த சண்டை காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் அடிப்படையில் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜ்மான் பகுதியில் உள்ள தெரு ஒன்றில் கடந்த 7-ஆம் திகதி இரண்டு அரேபிய இளைஞர்கள் வாளால் தாக்கி சண்டையிட்டுள்ளனர்.

குறித்த சண்டையில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 3 அரேபியர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கொடூர சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டு அது வைரலானது.

குறித்த காணொளியானது பொதுமக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என புகார் எழுந்த நிலையில், தொடர்புடைய அரேபியரை அஜ்மான் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் அடிப்படையில் கைதான அரேபியருக்கு 6 மாதம் முதல் ஆயுள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,

அல்லது உள்ளூர் பண மதிப்பில் Dh50,000 முதல் Dh3 மில்லியன் வரை அபராதமாக விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அமீரகத்தை பொறுத்தமட்டில் உரிய நபரின் முன்அனுமதி இன்றி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றுவது குற்றமாகும்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்