எகிப்து பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்ட 4500 வருட பழமையான கல்லறை

Report Print Athavan in மத்திய கிழக்கு நாடுகள்
180Shares
180Shares
ibctamil.com

எகிப்திய அதிகாரிகள் சனிக்கிழமையன்று 4,400 வருடம் பழமையான கல்லறை ஒன்றை கெய்ரோ அருகே கண்டுபிடித்தனர். இது அந்த நாட்டின் பண்டைய மன்னர் 5ம் ஹெட்செட் அரசின் தலைமை பூசாரியின் கல்லறை என்று எகிப்து நாட்டின் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அவர் மன்னரின் அரசில் உயர் அதிகாரியாகவும் மற்றும் அவர் அரச அரண்மனையில் வலுவான ஆளுமையுடன் திகழ்ந்த குறிப்புகள் உள்ளன" என்றார் எகிப்திய பழங்குடியினர் துறை அமைச்சர் Khaled al- Anani செய்தியாளர்களிடம் பேசும் போது.

காசாவின் பெரிய பிரமிடுக்கு அருகே காணப்பட்ட இந்த கல்லறையானது மண் மற்றும் செங்கற்களால் ஆனது மற்றும் இதன் சுவர் ஓவியங்களுடன் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது,

இதில் பல்வேறு படங்களில் ஹெட்பேட்டைக் மன்னனை குறிக்கின்றது மற்ற காட்சிகள் ஒரு குரங்கு படத்தை கொண்டுள்ளது. இது பொதுவாக ஃபாரோனிச காலங்களில் வீட்டில் செல்லமாக குரங்கை வளர்த்ததை குறிப்பிடுகிறது.

அகழ்வாராய்ச்சி பணிக்கு தலைமை வகித்த முஸ்தபா அல்-வசாரி கூறும் போது எதிர்காலத்தில் இதே பகுதியில் பல பழங்கால தொடர்புடைய பொருட்கள் கண்டுபிடிக்கப்படலாம் அதற்கான முயற்சிகள் தொடர்கிறது என்றார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்