இந்திய பிரதமருக்கு உயரிய விருது: ஐக்கிய அமீரகம் வழங்குகிறது

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான சயித் பதக்க விருதை வழங்க உள்ளதாக ஐக்கிய அமீரக அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் வழங்கப்படுகிறது.

அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ஐக்கிய அமீரகத்தின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது.

ஐக்கிய அமீரகத்துடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஐக்கிய அமீரகத்தின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மிக உயர்ந்த சயித் பதக்கம் விருதை இந்திய பிரதமருக்கு வழங்குவதற்கு ஐக்கிய அமீரக ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார்.

இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...