அமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்.. போர் மூளும் அபாயம்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரான் வான்வெளியில் ஊடுருவிய அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தெற்கு கடலோர மாகாணமான ஹார்மோஸ்கானில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட RQ-4 குளோபல் ஹாக் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ஈரானிய வான்வெளியில் எந்த அமெரிக்க விமானங்களும் இயங்கவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரான் கூற்றுகளை மறுத்துள்ள அமெரிக்கா, சர்வதேச வான்வெளியல் பறந்துக்கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான MQ-4C ட்ரைட்டான் உயர் ரக கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை, ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஒரு MQ-4C ஆளில்லா விமானத்தின் மதிப்பு 182 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. மேலும், இந்த உளவு இயந்திரம் 50,000 அடி உச்சவரம்பில் மட்டும் பறக்கும், மணிக்கு 380 மைல் வேகத்தில் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார தடை, எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், தற்போது உளவு விமானம் சுட்டு வீழத்தப்பட்டது என தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்