பிரித்தானியாவை பழிக்குப் பழி வாங்க வேண்டும்: மூத்த ஈரான் அரசியல்வாதி!

Report Print Balamanuvelan in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானின் எண்ணெய்க்கப்பலை பிரித்தானியா கைப்பற்றியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதோடு, வார்த்தை மோதலும் வெடித்துள்ளது.

ஈரானின் மூத்த அரசியல்வாதியான Mohsen Rezaee என்பவர், பிரித்தானியாவை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Grace 1 என்று பெயரிடப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை, ஸ்பெயின் கடல் பகுதியில் பிரித்தானியர்கள் கைப்பற்றினர்.

ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி சிரியாவுக்கு அந்த எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதால், அந்த கப்பல் கைப்பற்றப்பட்டது.

1984ஆம் ஆண்டு, ஈராக்குடனான 'Tanker War' என்னும் போரின்போது IRGC என்னும் ராணுவப்பிரிவை தலைமையேற்று நடத்தியவரான Rezaee, ட்வீட் ஒன்றில், 40 ஆண்டு வரலாற்றில் நாங்கள் பிரச்சினையை துவக்கியதில்லை, என்றாலும் வம்புக்கிழுப்பவர்களை விட்டதும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா, ஈரான் எண்ணெய்க்கப்பலை திரும்பக் கொடுக்காவிட்டால், பழிக்குப் பழி வாங்கும் விதமாக, பிரித்தானிய எண்ணெய்க் கப்பல் ஒன்றை கைப்பற்றுவது ஈரானியர்களின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார் Rezaee.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers