விரைவில் அறிமுகமாகும் 64 எம்.பி. கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ!

Report Print Kavitha in மொபைல்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலின் படி செப்டம்பர் மாதம் அளவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்கனவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

இதற்கமைய 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மே மாதத்தில் சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 - 64 எம்.பி. கேமரா சென்சாரை அறிமுகம் செய்தது எனினும், எந்த ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.

பிரபல வல்லுநரான ஐஸ் யூனிவர்ஸ் புதிய 64 எம்.பி. சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனை சாம்சங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை ரியல்மி மற்றும் ரெட்மி போன்ற பிராண்டுகள் இந்த அம்சத்தை வழங்க இருப்பதால் சாம்சங் தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சாம்சங் உள்பட மூன்று நிறுவனங்கள் 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கின்றன இருப்பினும் இதில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers